சிரிப்பு ஆர்யாவும் குத்துவிளக்கு நயன்தாராவும்
‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படம் மூலம் மீண்டும் கலகலப்பாக வருகிறார் இயக்குனர் ராஜேஷ்.எம். ‘‘இதில் ஆர்யாவும், நய ன்தாராவும் எதிரெதிர் அணிகள். இருவரையும் அவர்களின் முந்தைய இமேஜிலிருந்து விடுவித்திருக்கிறேன்’’ என்கிறார்.
ஆர்யா என்றாலே ஆக்ஷனும் அகோரியும்தான் நினைவுக்குவருகிறது. அவர் எப்படி காமெடியில்?
அறிந்தும் அறியாமலும்’ படத்திலிருந்து அவரை கவனித்து வந்திருக்கிறேன். அவரிடம் சின்னதாக ஒரு ஹியூமரிசம் இருக்கும். அதை முழுப் படத்துக்கும் கொண்டு வந்திருக்கிறேன்.
அதை அவரும் உணர்ந்து நடித்திருக்கிறார். ஆர்யாவின் கேரியரில் இந்தப் படத்துக்கு நிச்சயம் தனி இடம் உண்டு. அவரும் சந்தானமும் சேர்ந்து நயன்தாராவை அடிக்கிற கிண்டல், கோல்டன் காமெடி டைப்பாக இருக்கும்.
இதில் நயன்தாரா கிளாமராக நடிக்கவில்லையாமே?
அவருக்கு கவர்ச்சி இமேஜ் ஏற்பட்டது சமீப காலத்தில் தான். ‘ஐயா’, ‘சந்திரமுகி’ ‘யாரடி நீ மோகினி’ எல்லாம் நயனின் இன்னொரு முகம் இல்லையா... அந்த முகம் இப்ப டத்தில் திரும்பியிருக்கிறது.
ஆனாலும்ரசிகர்களை ஏமாற்றக்கூடாது என்பதற்காக பாடல்களில் மட்டும் கொஞ்சம் கிளாமர் இருக்கும்.
ஆர்யா, நயன், சந்தானம் இவர்களைத் தாண்டி படத்தில் யார் ஆதிக்கம் அதிகம்?
நிறைய பேர் இருக்கிறார்கள். சில விஷயங்கள் சஸ்பென்சாக இருக்கட்டுமே என்றுதான் அதுபற்றி சொல்லவில்லை. தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலத்தின் மகன் பஞ்சு சுப்பு, ‘நான்கடவுள்’ ராஜேந்திரன், லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோரின் கேரக்டர் இதுவரைக்கும் பார்க்காத விதத்தில் இருக்கும்.
யுவன் கூட்டணியில் இசை எப்படி?
மொத்தம் 5 பாடல்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை. ‘யார் இந்தப்பெண் தானோ...’ பாடல் இப்போதே சூப்பர் ஹிட். படத்தின் ரீ ரிக்கார்டிங் முடிந்ததும் ‘இன்னொரு பாட்டு இருந்தா நல்லா இருக்கும்’ என்று கூடுதலாக ஒரு பாட்டை யுவன் போட்டிக்கிறார்.
சினிமா யதார்த்தத்தை நோக்கி போய்கிட்டிருக்கப்போ நீங்ககாமெடி, காதல்னு போறீங்களே?
என்னை பொறுத்த வரை சினிமா, ரசிகர்களை சந்தோஷப்படுத்தும் ஒரு சாதனம். அந்தவழியை நான் தேர்ந்தெடுத்திருக்கிறேன். அதை ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ செய்வான்.
No comments:
Post a Comment